Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

'இனம், மதம் கடந்து மக்களில் ஒருவராக இருப்பதில் எனக்குப் பெருமை!'

T

The Leader Desk

செப்டம்பர் 16, 2025 • 3:14 AM

'இனம், மதம் கடந்து மக்களில் ஒருவராக இருப்பதில் எனக்குப் பெருமை!'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நண்பராகவும் இருப்பதில் நான் பெருமை கொள்கின்றேன்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
  • ஆட்சியில் இருந்தபோதும், அதிகாரத்தில் இல்லாதபோதும் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுடனேயே இருக்கின்றனர்.
  • தமது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

நண்பராகவும் இருப்பதில் நான் பெருமை கொள்கின்றேன்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கார்ல்டன் இல்லத்திற்கு வந்த தருணத்திலிருந்து தம்மை சந்தித்து ஆசிர்வதித்து வரும் மகா சங்கத்தினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“என் வாழ்க்கையின் பெரும்பகுதி மக்களுடனேயே கழிந்தது. இன்றும் அதேதான். ஒரு பதவிக்காலம் முடிவடையலாம். ஆனால் மக்களின் அன்பு, பதவிக்காலத்தை விட மேலானதாகும். அது ஒருபோதும் முடிவதில்லை. ஆட்சியில் இருந்தபோதும், அதிகாரத்தில் இல்லாதபோதும் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுடனேயே இருக்கின்றனர்.

“கிராமத்தில் நட்பும் பிணைப்புகளும் எங்களுக்குப் பரிச்சயமானவை. சிறு குழந்தைகளின் உரையாடல் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது. இந்த உரையாடல் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஏனெனில், சிறு குழந்தைகள் முன்னாள் ஜனாதிபதியுடன் பேசுவதில்லை. அதனால்தான் நான் அதை இரசிக்கிறேன். உணர்வு ரீதியாக நாட்டு மக்களுடன் பிணைப்பில்லாத ஒரு அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக இருக்க முடியாது.

“இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல், மக்களின் தலைவராகவும், உங்கள் அண்டை வீட்டாராகவும், உங்கள் நெருங்கிய நண்பராகவும் இருப்பதில் நான் பெருமை கொள்கின்றேன்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

mmmmrrr.png

 

547255663_1317400623085463_1682981563204700658_n.jpg

 

548224049_1317402923085233_528604051231118307_n.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'இனம், மதம் கடந்து மக்களில் ஒருவராக இருப்பதில் எனக்குப் பெருமை!' | Tamil Leader | We Lead the Nation