செம்மணியில் தொடர்ந்து என்புக்கூடுகள் மீட்கப்படுவது தொடர்பில் தென்னிந்திய
இயக்குநரும், நடிகரும், இசையமைப்பாளருமான ரி.ராஜேந்தர் கருத்து வெளியிட்டுள்ளார்.
"இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த அந்தப் பகுதியில் இராணுவத்தின் வெறியாட்டத்தையும், அந்த ஓநாய்களினுடைய களியாட்டத்தையும், மயானத்தில் அவர்கள் ஆடிய ஆட்டத்தையும் தமிழர்கள் மீது அவர்கள் கொண்ட காட்டத்தையும் சர்வதேச உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்.
"இந்தப் புதைகுழிக்குள்ளே இத்தனை உடல்கள் மீட்கப்படுகின்றன. தோண்டத் தோண்ட என்புக்கூடுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதைப் பார்க்கும்போது தமிழர்களாகிய எமது நெஞ்சம் பதைபதைக்கிறது" என ரி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.