யாழ் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான

முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று (06) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கையில்,

காணிகள் கடற் படையினரால் அளவீடு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக் குளம் பகுதியான J/ 435கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கின்ற மக்களின் மீன்பிடி நிலங்கள்,மக்களுக்குரிய காணிகள் திருகோணமலையில் இருந்து வந்த கடற்படையின் ஒரு குழுவால் மிக ரகசியமாக அளவீடு செய்யப்பட்டுள்ளது.

தங்களுடைய சொந்த காணிகள் கடற் படையினரால் அளவீடு செய்யப்படுவதை அறிந்த அங்கு இருந்த ஒரு சில மக்கள் கடற்படை இடம் கேள்வி எழுப்பிய போது உங்களுடைய காணி என்றால் அனுமதி பத்திரத்தை காட்டுமாறு தெரிவித்ததாக மக்கள் கூறுகின்றனர்

சுண்டிக்குள பகுதியில் காணப்படும் அதிகளவான காணிகள் அரசகாணிகளாக காணப்படுகிறது, அங்கே வசித்த மக்களின் காணிகளுக்கு உறுதி இருக்காது மக்கள் காலா காலம் அந்த காணியில் வாழ்ந்து வந்தார்கள்.ஆனால் அவர்கள் வாழ்ந்த காணியை தற்பொழுது சுவிகரிப்பதற்காக கடற்படை முயற்சிக்கின்றது.

அந்த பகுதியில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன வீடுகள்,கிணறுகள், அங்கே மக்களால் பராமரிக்கப்பட்ட மரங்களும் இருக்கின்றன

இது தொடர்பாக அப்பகுதி கிராம அலுவலருக்கோ ,வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளருக்கோ தெரியப்படுத்த படவில்லை ஒரு பிரதேசத்தில் ஒரு காணியை அளவீடு செய்ய வேண்டும் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மீனவ சங்கம், பிரதேச செயலாளர், கிராம அலுவலர், காணிக் கிளையினர் ஆகிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் மிக ரகசியமாக இந்த காணிகளை அளவீடு செய்துள்ளார்கள் காலப்போக்கில் இந்த பகுதியில் கடல் தொழில் செய்கின்ற மக்கள் கடல் தொழில் செய்ய முடியாத நிலைமை உருவாகப் போகிறது.

சுண்டிக்குளம் பகுதியில் கடற் படையின் தளங்கள் விஸ்தரிக்கப்பட போகிறது. மக்களுடைய காணிகள் மக்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும் இல்லை என்று சொன்னால் மக்களை ஒருங்கிணைத்து இந்த காணிகளை விடுவிப்பதற்கான போராட்டங்களை செய்யப் போவதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்தார்

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி