நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுக்ள் , விளையாட்டு போட்டிகள்
நடத்துவதற்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் கல்வியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க பாடசாலைகளில் இவ்வாறு மாணவர்களிடம் நிதி சேகரிக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
விசாரணைக் குழு
பாடசாலைகளில் நிதி சேகரிக்கப்படுவதாக கூறப்படும் முறைப்பாடுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் விசாரணைக் குழுவொன்றை நியமிக்கப்படவுள்ளது
பாடசாலைகளில் நடைபெறும் உற்சவங்களுக்காக அவ்வாறு மாணவர்களின் பெற்றோர்களிடம் நிதியைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என கல்வியமைச்சு ஏற்கெனவே சுற்று நிருபம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ள நிலையிலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
அதனை ஆராய்வதற்காகவே குழுவொன்று நியமிக்கப்படுவதாகவும் எவ்வாறாயினும், அரசாங்க பாடசாலைகளில் மாணவர்களிடம் பல்வேறு நடவடிக்கைகளுக்காக நிதி சேகரிப்பது தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.