டுபாயில் வசிக்கும் பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் ஒருவர் தனக்கு தொலைபேசியில்
கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக, முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் அனைத்து பொலிஸ் விசேட பிரிவினருக்கும் அறிவித்துள்ள பதில் பொலிஸ் மா அதிபர் மரண அச்சுறுத்தல் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
டிரான் அலஸ் பொது பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய காலத்தில், பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைக் காரணம் காட்டியே, பாதாள உலகத் தலைவர் ஒருவர் அலஸுக்கு பல முறை அழைப்புகளை மேற்கொண்டு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
டிரான் அலஸுக்கு ஏற்கனவே ஒரு பாதாள உலகத் தலைவர் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.