இந்நிலையில், ஜுனின் மாகாணத்தில் உள்ள விஸ்கடின் டெல் எனெ என்ற மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து ஷெரிங் பாத் கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.
பெரு நாட்டில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசுக்கு எதிரான தாக்குதல்களை ஷெரிங் பாத் கிளர்ச்சியாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து ஜுனின் மாகானத்தில் ராணுவம் மற்றும் பொலிஸ் குவிக்கபட்டுள்ளது.


