ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய துணைத் தலைவராக ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை நடைபெற்ற ஐ.தே.க செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க தலைமையில் ஐ.தே.க. செயற்குழு கூட்டம் நேற்று பிற்பகல் கூடியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராக இருந்த சஜித் பிரேமதாச பதவி விலகியதன் மூலம் வெற்றிடமாக இருந்த இடத்திற்கு துணைத் தலைவரை நியமிப்பது குறித்து நேற்றைய சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

ரவி கருணநாயக்க மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோர் நேற்று துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க ரகசிய வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்கெடுப்பில் ருவன் விஜேவர்தன 28 வாக்குகளையும், ரவி கருணநாயக்க 10 வாக்குகளையும் பெற்றனர்.

119508358 3243677659083456 4255904103508335062 n

இதனடிப்படையில் புதிய துணைத் தலைவராக ருவன் விஜேவர்தன தெரி வானார். அவரை வரவேற்க ஆதரவாளர்கள் கட்சி தலைமையகமான சிரிகொத்தாவிற்கு வருகை தந்திருந்தனர்.

ருவன் விஜேவர்தன சிரிகொத்தாவில் பௌத்த மத அனுஷ்ட்டானங்களில் ஈடுபட்டார்.

வாக்கெடுப்பிற்கு பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வஜிர அபேவர்தன, அடுத்த ஜனவரி வரை ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.க வழிநடத்துவார் என்று கூறினார்.

துணைத் தலைவர் பதவிக்கு  நீங்கள் ஏன் போட்டி இடவில்லை என்ற  கேள்விக்கு ​​தான் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், துணைத் தலைவர் பதவிக்கு அல்ல என்றும் வஜிர அபேவர்தன பதிலளித்துள்ளார்.

 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி