ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஆளும் கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நேற்று பிற்பகல் பாதுக்கையில் பதிலளித்தார்.

இதன்போது, போலிக் குழுக்களை நியமித்து நாட்டு மக்களை ஏமாற்றும் காலப்பகுதியே தற்போது நிலவுவதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

மற்றொரு புறம் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது சேறு பூசுவதற்காக குழுக்களை நியமிக்கும் செயற்பாடுகள் இடம்பெறுவதாக அவர் கூறினார்.

அவிசாவளையில் 25,000 பேரிடம் கொள்ளையடிக்கப்பட்ட 54 கோடி ரூபாவை மீண்டும் அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தை மேற்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தி அந்த பணத்தை சட்டபூர்வமாக பெற்றுக் கொடுக்கும் என அவர் வாக்குறுதியளித்தார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும், வெளிநாடுகளில் தொழில் புரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவ்வாறு துன்புறுத்தப்படுகின்ற போது எமது அரசாங்கம் கவனத்திற்கொள்ளாமல் இருக்கின்றது. அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரகமும் நித்திரையில் உள்ளது. அன்று ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வரும்போது வெளிநாட்டு வீரர்கள் என கூறினர். கொரோனா வந்தபோது கொரோனா குண்டுகள் என அவர்களை அடையாளப்படுத்தினர். அப்படியான ஒரு அரசாங்கமே உள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி