2024ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் துறையால்
நடத்தப்பட்ட மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில், நாட்டின் மக்கள் தொகையில் 2,281 பேர், தலைக்கு மேல் கூரை இல்லாமல் வெட்ட வெளியில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
அந்தக் குழுவில் பெரும்பான்மையானவர்கள், அதாவது 841 பேர், மேல் மாகாணத்தில் வாழ்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களில் 536 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 229 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 76 பேர் களுத்துறை மாவட்டத்திலும் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
மேல் மாகாணத்தில் தலைக்கு மேல் கூரை இல்லாமல் வெட்டவெளியில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, தங்குமிடம் இல்லாத மொத்த மக்களின் எண்ணிக்கையில் 28% ஆகும்.
தெற்கு மாகாணத்தின் மக்கள் தொகையில், 307 பேர் வெட்டவெளியில் வசிக்கின்றனர், இது 12% ஆகும். அந்தக் குழுவில், 139 பேர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 133 பேர் மாத்தறை மாவட்டத்திலும், மேலும் 35 பேர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் வசிக்கின்றனர்.
வடமேற்கு மாகாணத்தில் வீடு இல்லாமல் 248 பேர் வெளியில் வசிக்கின்றனர். இவர்களில் 135 பேர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், மேலும் 113 பேர் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
சபரகமுவ மாகாணத்தில் 217 பேர் தங்குமிடம் இல்லாமல் வாழ்கின்றனர், அவர்களில் 160 பேர் இரத்தினபுரி மாவட்டத்திலும் 57 பேர் கேகாலை மாவட்டத்திலும் வசிக்கின்றனர்.
வடமத்திய மாகாணத்தில் 207 பேர் வெளியில் வசிக்கின்றனர். இவற்றில் 180 பேர் அனுராதபுரம் மாவட்டத்தையும், 27 பேர் பொலன்னறுவை மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.
மத்திய மாகாணத்தில் 173 பேர் வெளியில் வசிக்கின்றனர். இவர்களில் 139 பேர் கண்டியிலும், 21 பேர் மாத்தளையிலும், 13 பேர் நுவரெலியா மாவட்டத்திலும் வசிக்கின்றனர்.
ஊவா மாகாணத்தில் 125 பேர் வெளியில் வசிக்கின்றனர், அவர்களில் 72 பேர் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மொனராகலை மாவட்டத்தில் மேலும் 53 பேர் வசிக்கின்றனர். வட மாகாணத்தில் வெளியில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 90 ஆகும்.
இதில் யாழ்ப்பாணத்தில் 52, மன்னாரில் 04, வவுனியாவில் 32, முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு. நாட்டில் எந்தவொரு குடிமக்களும் வெளியில் வசிப்பதாக அறிவிக்கப்படாத ஒரே மாவட்டம் கிளிநொச்சி ஆகும். வடக்கு மாகாணம் வெளியில் வசிக்கும் குடிமக்களின் மிகக் குறைந்த சதவீதத்தை, 5.3% ஆகக் கொண்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் 73 பேர் வெளியில் வசிப்பதாகவும் தெரியவந்துள்ளது. அவர்களில் 29 பேர் மட்டக்களப்பிலும், 20 பேர் அம்பாறையிலும், 24 பேர் திருகோணமலை மாவட்டத்திலும் வசிப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது.