கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர்

எஸ்.வியாழேந்திரனை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மார்ச் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இலஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவர் அன்று மாலை கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது ஏப்ரல் 01ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து அவர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

ஏப்ரல் 01ம் திகதி முன்னிலையாகிய போது எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார்.

அதனை தொடர்ந்து இன்றையதினம் (8) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

2016ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த போது நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கு வழக்கு இன்று (08) கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த நீதவான் பிணையில் செல்ல அனுமதித்ததோடு, சந்தேக நபர் வெளிநாடு செல்வதைத் தடை செய்யும் உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web