அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஏப்ரல் 2ஆம் திகதி 10% வரி விதித்த பிறகு, இலங்கையிலிருந்து
ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளின் விலைகள் அமெரிக்க சந்தையில் அதிகமாக இருக்கும் என்று, அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழுவின் பகுப்பாய்வு மதிப்பிட்டுள்ளது.
அவர்களின் கூற்றுப்படி, அமெரிக்க கட்டணங்கள் தற்போதைய சராசரியான 14.7% இலிருந்து 37.5% ஆக அதிகரிக்கும். அமெரிக்காவில் ஆடை விலைகள் 12.5% முதல் 20.6% வரை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
கடை உரிமையாளர்கள் ஆடைகளுக்கு 22% முதல் 33% வரையான குறைந்த செலவையே ஏற்கவேண்டியிருக்குமு் என்றும் பகுப்பாய்வு காட்டுகிறது.
தற்போது 15 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்படும் குழந்தைகளுக்கான பிஜாமாவின் விலை 18 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும்.
தற்போது 50 அமெரிக்க டொலர் விலையில் உள்ள பெண்களுக்கான ஸ்வெட்டர் 56 அமெரிக்க டொலர்களில் இருந்து 60 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் அதே நேரத்தில், தற்போது 80 அமெரிக்க டொலர் விலையில் உள்ள ஆண்களுக்கான ஜீன்ஸ், 96 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும்.
குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் பின்னலாடை அணிகலன்கள், இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நான்காவது பெரிய ஏற்றுமதிப் பொருளாகும்.
வரி விதிப்பு காரணமாக இறக்குமதி குறையும் அதேவேளை, அமெரிக்க ஆடை உற்பத்தியாளர்களின் வருவாய் 712 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் ஆடை ஏற்றுமதி தரவுகளின்படி, ஒட்டுமொத்தமாக அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பிரிவில் ப்ரா, கர்ட்ல்ஸ், பிரேஸ், சஸ்பெண்டர், கார்டர் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளை உள்ளடக்கியது.
2024ஆம் ஆண்டில், இலங்கை 549.46 மில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.