2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளை
இன்று முதல் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாவட்டச் செயலகங்களிலிருந்து பெறப்படும் வரிசையில், வாக்குச் சீட்டுகள் தொடர்பான விபரங்கள் அச்சகத்திற்கு அனுப்பப்படும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல், எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.