2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பிரத்தியேக
வகுப்புகள், நாளை (11) நள்ளிரவுக்குப் பிறகு நடத்தப்பட்டால், பொலிஸாருக்கு தகவல் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்படி காலகட்டத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகள் நடத்தப்பட்டால், பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தகவல் தெரிவிக்குமாறு, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் தலைமையகம் - 0112421111
பொலிஸ் அவசர எண் - 119
இலங்கைப் பரீட்சைத் துறை - 1911
பாடசாலைப் பரீட்சைகள் அமைப்பு மற்றும் முடிவுகள் கிளை - 0112784208/ 0112784537
2024 க.பொ.த (சா/த) பரீட்சை நடைபெறவுள்ளதால், மார்ச் 11ஆம் திகதி நள்ளிரவு முதல், பரீட்சைக்கான அனைத்துப் பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்கள் மூலம் ஆதரவு வழங்குவது தடைசெய்யப்படும் என்று, பரீட்சைகள் திணைக்களத்தால் கடந்த 7ஆம் திகதி அறிவித்திருந்தது.
இம்முறை, க.பொ.த (சா/த) பரீட்சை, மார்ச் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.