உத்தேச MCC ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படவிருக்கும் 480 மில்லியன் டொலரிலிருந்த இலங்கை அரசாங்கத்திற்கு பணமோ, செலவீனமோ வழங்கப்படவில்லையென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயம் கூறுகிறது.

அவர்களது உத்தியோக டுவிட்டர் கணக்கில் இது குறித்து அவர்கள் பதிவிட்டுள்ளார்கள்.

எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கமானது ஒப்பந்தத்தில் இரு கட்டங்களுக்கு ஒப்பமிட்டு 10 மில்லியன் டொலர் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அதனை செலவிட்ட முறை குறித்து எவ்வித கணக்குப் பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை எனவும் மேற்படி ஒப்பந்தம் சம்பந்தமாக மீளாய்வு செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்ட பேராசிரியர் லலிதசிறி குணருவன் ஜனாதிபதியின் முன்னிலையில் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி