திட்டமிட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ

சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான பெண்ணை கைது செய்வதற்கு சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 1.2 மில்லியன் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 19ஆம் திகதி, புதுக்கடையில் உள்ள புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ என்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரிக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த முக்கிய சந்தேக நபர், இஷாரா செவ்வந்தி என்ற 25 வயதுடைய பெண் ஆவார்.

துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து அவர் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இல்லாததால், சந்தேக நபரைக் கைது செய்வதற்கு சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு ரூ.1.2 மில்லியன் ரொக்கப் பரிசு வழங்க பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது.

தகவல்களை வழங்கக்கூடிய தொலைபேசி எண்கள் -

கொழும்பு குற்றப்பிரிவு பணிப்பாளர்- 071-8591727

கொழும்பு குற்றப்பிரிவு OIC - 071-8591735

தகவல்களை வழங்குபவர்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி