Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 22,522 குடும்பங்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு முகாம்களில்!

T

The Leader Desk

டிசம்பர் 15, 2025 • 5:07 AM

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 22,522 குடும்பங்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு முகாம்களில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மையங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
  • அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள 762 பாதுகாப்பு மையங்களில் 22,522 குடும்பங்களைச் சேர்ந்த 70,055 பேர் தற்போது தங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அங்குள்ள 222 பாதுகாப்பு மையங்களில் 5,427 குடும்பங்களைச் சேர்ந்த 17,437 பேர் தங்கியுள்ளனர்.
  • நுவரெலியாவில் உள்ள 206 பாதுகாப்பு மையங்களில் 6,487 குடும்பங்களைச் சேர்ந்த 19,750 பேரும், பதுளை மாவட்டத்தில் உள்ள 155 பாதுகாப்பு மையங்களில் 6,026 குடும்பங்களைச் சேர்ந்த 19,409 பேரும் தற்போது தங்கியுள்ளனர்.
எழுத்து அளவு:

மையங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள 762 பாதுகாப்பு மையங்களில் 22,522 குடும்பங்களைச் சேர்ந்த 70,055 பேர் தற்போது தங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு மையங்களில் அதிகமானவை தற்போது கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளன. அங்குள்ள 222 பாதுகாப்பு மையங்களில் 5,427 குடும்பங்களைச் சேர்ந்த 17,437 பேர் தங்கியுள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பு மையங்கள் அடுத்தபடியாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் அமைந்துள்ளன. நுவரெலியாவில் உள்ள 206 பாதுகாப்பு மையங்களில் 6,487 குடும்பங்களைச் சேர்ந்த 19,750 பேரும், பதுளை மாவட்டத்தில் உள்ள 155 பாதுகாப்பு மையங்களில் 6,026 குடும்பங்களைச் சேர்ந்த 19,409 பேரும் தற்போது தங்கியுள்ளனர்.

இதேவேளை, இந்த பாதுகாப்பு மையங்களில் உள்ள குடும்பங்களை விரைவாக மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் இந்தக் குடும்பங்களை மீளக்குடியேற்ற விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள சிலரது வீடுகள் முழுமையாகவும், மற்றவர்களின் வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும், வேறு சிலர் தாம் வசித்த இடத்தில் நிலவும் ஆபத்தான நிலைமைகள் காரணமாக மீண்டும் அங்கு குடியேற விரும்புவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 3 மாத வாடகை கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வீடுகள் முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு வீடுகளை வழங்குவதே இப்போதைய சவாலாக உள்ளது என்றும், அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட 50 லட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கான அரச காணிகளை வழங்குவது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்காக அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகள் தொடர்பான தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...