அதன்படி, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தயார் செய்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களை இன்று (15) அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட 147 பாடசாலைகளை நாளை மீண்டும் ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் சீருடைகள் தொடர்பில் நெகிழ்வுத்தன்மை கொண்ட கொள்கை பின்பற்றப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


