நாட்டில் தற்போது நிலவும் அரிசி பற்றாக்குறை, ஒரு வாரத்திற்குள் முற்றிலுமாக நீங்கும் என்று,
அரிசி தொழிலதிபர் டட்லி சிறிசேன கூறுகிறார்.
மீண்டும் நாட்டரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், சந்தைக்கு அரிசி கையிருப்பு வருவதால் தற்போதைய அரிசி பற்றாக்குறை நீங்கும் என்று டட்லி சிறிசேன கூறினார்.
இதற்கிடையில், புத்தளத்தில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.
மழைக்கால வானிலை காரணமாக உப்பு உற்பத்தி குறைந்திருந்தது. இதன் காரணமாக, நாட்டின் உப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய, உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.