அதாவது சுமார் 246,000 மெட்ரிக் தொன்களாகும்.
தற்போது உள்ளூர் சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு கீரி சம்பா விற்பனை செய்யப்படுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு இறக்குமதியாளருக்கு 520 மெட்ரிக் தொன் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு, 2025-10-15 ஆம் திகதி முதல் 2025-11-15ஆம் திகதி வரை கீரி சம்பா அரிசிக்கு மாற்றீடாகக் கருதப்படும் GR 11/பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு, இறக்குமதிக் கட்டுப்பாட்டு உரிமம் பெறும் தேவையிலிருந்து விலக்கு அளிப்பதற்காக, உணவு கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்களும், வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


