Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

நேபாளத்தில் சிக்கிய இஷாரா மற்றும் டூப்ளிகேட் இஷாரா!

T

The Leader Desk

அக்டோபர் 15, 2025 • 3:22 AM

நேபாளத்தில் சிக்கிய இஷாரா மற்றும் டூப்ளிகேட் இஷாரா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யுவதி மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
  • இதனையடுத்து, ரொஹான் ஓலுக்கலவின் தலைமையில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
  • நேபாள பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் அதிகாரிகளுடன் சென்ற ரொஹான் ஓலுக்கல, நேற்று முன்தினம் இரவு இந்த சந்தேகநபர்களை கைது செய்திருந்தார்.
எழுத்து அளவு:

யுவதி மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பேலியகொட குற்றப் பிரிவின் பணிப்பாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ரொஹான் ஓலுக்கல மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் கிஹான் டீ சில்வா ஆகியோரால் நேபாளத்தில் மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த பாதாள உலகக் கும்பலைப் பிடிக்க முடிந்தது.

நேபாள பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் அதிகாரிகளுடன் சென்ற ரொஹான் ஓலுக்கல, நேற்று முன்தினம் இரவு இந்த சந்தேகநபர்களை கைது செய்திருந்தார்.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரின் முழுமையான மேற்பார்வையின் கீழ், பேலியகொட குற்றப் பிரிவின் பணிப்பாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ரொஹான் ஓலுக்கல மற்றும் பொலிஸ் பரிசோதகர் கிஹான் த சில்வா ஆகியோர் கடந்த சனிக்கிழமை (11ஆம் திகதி) முதல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கெஹெல்பத்தர பத்மேயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இஷாரா செவ்வந்தி மறைந்திருக்கும் இடத்தை பொலிஸாரால் அடையாளம் காண முடிந்தது. இதனையடுத்து, ரொஹான் ஓலுக்கலவின் தலைமையில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதில், இஷாரா செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்டுள்ள, இஷாராவின் உருவத்தைப் போன்ற தோற்றமுடைய மற்றைய யுவதி மீதே அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இஷாராவின் தற்போதைய தோற்றம், ஊடகங்களில் வெளியிடப்பட்ட அவரது புகைப்படங்களிலிருந்து வேறுபட்டுள்ள அதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள மற்றைய யுவதி, இஷாராவின் தற்போதைய தோற்றத்தை விடவும் அவரைப் போலவே இருக்கிறார். (தகவல் - திவயின)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...