பழுதடைந்த உணவில் இருந்து வயிற்றுப்போக்கு புற்றுநோய் உட்பட அபாயகரமான 200 நோய்கள் பரவும் வாய்ப்பு இருப்பதாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகில் பழுதடைந்த உணவுகளை உட்கொண்டு ஒரு வருடத்திற்குள் சுமார் 420,000 பேர் இறக்கின்றனர் என்று சங்கம் கூறுகிறது.

இதற்கு மேலதிகமாக உலகில் சுமார் 600 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

உண்மை என்ன வென்றால்

ஒரு வருடத்தில் தலா 10 பேரில் ஒருவர் அசுத்தமான உணவுகளை உட்கொள்வதால் நோய்வாய்ப்படுகிறார், நாற்பது சதவீதம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நோய் வாய்ப்படுகின்றனர்.

yimg JhTJSA 640x426

"மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், ஆண்டுக்கு 125,000 குழந்தைகள் இறக்கின்றனர்."

உணவு உற்பத்தி முறையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், தயாரிப்பு முதல் முடிவு திகதி வரை உணவுகள் உண்டு வந்தால் , உலக மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் நோய்வாய்ப்பட்டு இறப்பதைத் தடுக்க முடியும் என்று இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நம்புகிறது.

இதனால் முன்பை விட, ஆரோக்கியமான உணவை வழங்குவதற்கான சவாலை எதிர்கொள்கிறோம்

கொவிட் -19 போன்ற தொற்று நோய்கள் பரவுகின்ற இந்த காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சங்கம் வலியுறுத்துகிறது.

உலக உணவு பாதுகாப்பு தினம் உலகெங்கிலும் ஜூன் 7 ஆம் திகதி அனைவரின் பொறுப்போடு கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு இலங்கை "ஆரோக்கியமான சந்தையை" உருவாக்குவதன் மூலம் "கொவிட் -19  தொற்றின் போது  உணவு பாதுகாப்பை உறுதி செய்வோம்"

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி