மகர சிறை அதிகாரிகளால் ஒரு கைதி சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பட்டினி போட்டு ஒரு இளம் கைதியை சித்திரவதை செய்து கொலை செய்ததாக சிறை அதிகாரிகளுக்கு  எதிராக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த புகார் மே 3 ம் திகதி மகர சிறையில் இருந்தபோது இறந்த காவிந்த இசுருவின் தந்தை சுமனதாச திசேராவால் கையளிக்கப்பட்டுள்ளது.

ஒரு கயிற்றின் உதவியுடன் தப்பிக்க முயன்றபோது சுவரில் இருந்து விழுந்ததாகவும், ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் எஸ்.பி. ஜாலியா சேனரத்ன தெரிவித்திருந்தார்.

அவரது மகன் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு அவரது கால்களும் ஒரு கையும் முறிக்கப்பட்டு மரணமடைந்துள்ளதாக ஆர்.எம்.கருணாவதி கூறினார்.

நான் சொல்ல வேண்டியது என்னவென்றால், என் மகன் கொல்லப்பட்டான். நாங்கள் காலையில் அவரைப் பார்க்கச் சென்றபோது அவருக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டது. கால்கள் உடைக்கப்பட்டிருந்தன. கை உடைக்கப்பட்டு அகலமாக வெடித்திருந்தது.

இறந்த எனது மகன் திறமையான விளையாட்டு வீரர் என நினைவு கூறும் கருணாவதி ஊடகங்களில் தெரிவித்ததாவது பாடசாலையில் ஆறு ஆண்டுகளாக அவரது செலவுகளும் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டன என்றும் அவர் கூறினார்.

சிறையில் காவிந்த இசுரு சில நாட்களாக உண்ணாவிரதம் இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி