ஐ.தே.க முன்னாள் பிரதித் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுடன் 99 கட்சி உறுப்பினர்களை இடைநிறுத்த ஐ.தே.க செயற்குழு நேற்று முடிவு செய்துள்ள அதே வேலை 'சமகி ஜன பலவேகய' விரைவில் கூடி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

ரணிலுக்கு எதிராக கட்சியின் உறுப்பினர்களின் நம்பிக்கையை மீறுவதற்கும், மக்கள் பிரதிநிதிகளை தவறாக வழிநடத்துவதற்கும், செயற்குழு உறுப்பினர்களை ஏமாற்றுவதற்கும், தவறாக வழிநடத்துவதற்கும், செயற்குழு ஒப்புதல் அளித்த முடிவுகளை மீறி செயல்படுவதற்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

துரோகங்கள் மற்றும் அரசாங்கத்துடன் உள்ள கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பல விடயங்களும் இதற்குள் அடங்கும் .

ஐ.தே.க செயற்குழு 62 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, அவர்களில் 40 க்கும் மேற்பட்டவர்கள் சமகி ஜன பல வேகயவுடன் உள்ளனர்.

இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 80 பேர் சமகி ஜன பல வேகயவுடன் சேர்ந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி