முதன்முறையாக, இலங்கையில் இருந்து 152 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1469 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நோயாளிகளில் 92 பேர் குவைத்திலிருந்தது வந்தவர்கள்., 53 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள்.

மற்ற ஐந்து பேரும் இந்தியாவின் சென்னையிலிருந்து  நாட்டிற்கு  வந்தவர்கள்.

19,000 இலங்கையர்கள் குவைத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்

இதற்கிடையில், செல்லுபடியாகும் விசா காலம் முடிவடைந்த குவைத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் நாட்டை விட்டு வெளியேற பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த பொது மன்னிப்பு காலம் முடிவடையும் கடைசி தருவாயில் உள்ளது.

ஒரு லட்சம் இலங்கையர்கள் அங்கு சட்டப்பூர்வ விசாவில் உள்ளனர், அதே நேரத்தில் 19,000 இலங்கையர்கள் குவைத் நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளனர்.

இதன் விளைவாக, அவர்களில் பெரும்பாலானோர் பொது மன்னிப்பு காலத்தில் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அங்கு சென்றுள்ள ஏராளமான இலங்கையர்கள் கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

குவைத் அங்கீகரிக்கப்பட்ட விதிகளுக்கு வெளியே...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கருத்து தெரிவிக்கையில் கொரோனா தொற்றுநோய்களின் போது உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விதிகளுக்கு  வெளியே குவைத் செயற்பட்டதாக அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.

இலங்கைக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களை அனுப்பும் போது அவர்கள் முறையான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும், சிறிய அறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார்.

இதனால்தான் இலங்கைக்கு வரும் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.

இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதில் நாடு அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையர்கள் திரும்ப அழைக்கும் முறை மாற்றப்பட்டுள்ளது

covid 19 kuwait

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை திருப்பி அழைக்கும் புதிய வழிமுறை தயாரிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த 197 பேரில் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குவைத்துக்கு வந்த 462 பேரில் 150 பேருக்கு பி.சி.ஆர் சோதனைகள் இடம்பெற்றுள்ளது அவர்களில் 96 பேர் தற்போது நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது

இந்த சூழ்நிலையில் இலங்கையர்களை வெளிநாட்டிலிருந்து திருப்பி அழைப்பதற்கான புதிய வழிமுறையை வகுக்க வியாழக்கிழமை (மே 28) சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டா ம் இணைப்பு 

மத்திய கிழக்கு தொழிலாளர் விடயத்தில் அரசு தலையீடு செய்யவில்லை!

கொரோனா தொற்றுநோயால் நாடு திரும்ப முடியாத பல்லாயிரக்கணக்கான மத்திய கிழக்கு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள 22 தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் கண்டித்துள்ளன.

கொரோனா தொற்றுநோயால் நாடு திரும்ப முடியாது குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள தொழிலாளர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை அரசாங்கம் தட்டிக்கழித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

"ஒரு சரியான திட்டமிடலின் கீழ் அவர்களை மீள அழைத்துவர வேண்டுமெனவும், எனினும் அவ்வாறு செய்யாமல், அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுக்காமல், இருப்பது கண்டிக்கத்தக்கது” என 22 தொழிற்சங்கங்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் மட்டும், 19,000ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொற்றுநோய் காரணமாக குறைந்த வசதிகளுடன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நாடுகளில் வீசா காலம் காலாவதியாகியுள்ள நிலையில், அந்த நாடு வழங்கியுள்ள கருணை காலமும் நிறைவடையும் நிலையில், அவர்களை மீண்டும் அழைத்து வருவது அரசாங்கத்தின் பொறுப்பு என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கும்போது, அரசாங்கம் அவர்களிடம் ஒருதொகை கட்டணத்தை அறவிடுவதாகவும், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான நிதியத்தில் பில்லியன் கணக்கான ரூபாய்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்கங்கள் வெளிநாட்டு தொழில் சந்தையில் இலங்கைக்கு அந்நிய செலாவணியை பாரியளவில் வழங்கும் மத்திய கிழக்கு தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய காரணி எனவும் குறிப்பிட்டுள்ளன.

குறித்த தொழிலாளர்களின் வாழ்வு அச்சுறுத்தலில் காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில், அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கும், தேவையான வசதிகள் மற்றும் வைத்திய வசதிகளை வழங்குவதற்கும், அந்த நாடுகளில் உள்ள நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களுக்கு வைத்திய சேவையை வழங்குவதற்கும், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.

மத்திய கிழக்கிலிருந்து வரும் தொழிலாளர்களை முறையான ஏற்பாடுகளின் நாட்டிற்கு அழைத்து வருவதற்கும், நோயுற்றவர்களை பராமறிக்கவும் நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் வாழ்வை தொற்றுநோய் ஆபத்திலிருந்து மீட்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை வர்த்தக மற்றும் பொது ஊழியர் சங்கம், இலங்கை அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை ஒன்றியம், அனைத்து இலங்கை பொது முகாமைத்துவ அலுவலர்கள் சங்கம், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம், நீர்ப்பாசன பொது தொழிலாளர் சங்கம், அரச ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பு, மாகாண முகாமைத்துவ சேவை அதிகாரிகள் சங்கம், ரயில்வே ஊழியர் சங்கம், வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கம், ஐக்கிய தொழிலாளர் சங்கம், அகில இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், தேசிய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், அரச தொழிற்சாலை ஊழியர் சங்கம், ஐக்கிய அஞ்சல் சேவை சங்கம், ஐக்கிய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், அனர்த்த முகாமைத்துவ சேவை நிலைய ஊழியர் சங்கம், இலங்கை தொழிற்சங்க கூட்டமைப்பு, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கூட்டு ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கில் பணிபுரிந்த நிலையில், நோய்த் தொற்றுக்குள்ளாகி நாடு திரும்பிய இலங்கையர் தொடர்பில், ஆளுங்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் வெளியிட்ட அவமானகரமான கருத்து தொடர்பிலும் குறித்த தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி