ஊழியர்களின் சம்பளத்தை  கூட பல அரசு நிறுவனங்கள் மற்றும் கூட்டுத் தாபனங்களுக்கு செலுத்த முடியாத அளவுக்கு  நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

அவர்கள் உடனடியாக தலையிடுமாறு தங்கள் அமைச்சர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சிறீலங்கன் ஏர்லைன்ஸும் ஊதியத்தை நிறுத்தி வைத்துள்ளது.

இதற்கிடையில், மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்களின் சம்பளம் மற்றும் பிற செலவுகளை ஈடுகட்ட ரூ .20 கோடி கடன் பெற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடனை இலங்கை வங்கியிடமிருந்து பெறுவதற்காக திரை சேரியிடமிருந்து  உத்தரவாதத்தைப் பெற தகவல் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு  அமைச்சரவை அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தில் 934 ஊழியர்கள் உள்ளனர்.அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் ஏனைய செலவுகளுக்கும் மாதாந்தம் 5 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ரூபாவாஹினி கூட்டுத்தாபன வட்டாரங்கள் கூறுகையில், மாதாந்தம்  ஊ ழியர்களின் சம்பளத்திற்காக 3 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி