சிறைக் கைதிகளின் மறுவாழ்வு மற்றும் வேலைவாய்ப்பில் மீண்டும் ஒருங்கிணைப்பதற்கான எவன்கார்ட் நிறுவனத்தின் கூட்டுத் திட்டத்தின் கீழ் பல தொழில்களுக்கு கைதிகளை அனுப்ப ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு கூறுகிறது.

சிறைச்சாலைகள்,துறைமுக அதிகாரசபைக்கு பேக்கரி பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்திடப்படும் என்று(புணர்வாழ்வு மற்றும் திறன் மேம்பாட்டு) ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க மேலும் கூறுகையில், பயிற்சி பெற்ற சிறைக் கைதிகள் வேலைவாய்ப்புக்காக கட்டுமாண நிறுவனங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

சமூகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட நிபுணரின் பங்களிப்பு:

சிறைத் கைதிகளுக்கு புணர்வாழ்வளிக்க எவன்கார்ட் திட்டமிட்டுள்ள தொடர்ச்சியான தொழில் பயிற்சித் திட்டங்கள், தொழிலாளர்களை உருவாக்குவதற்கும் சமூகமயமாக்குவதற்கும் ஏற்கனவே அரசு மற்றும் தனியார் துறையினரின் ஆதரவைப் பெற்றுள்ளன.

இந்த திட்டத்தில் சிறைக் கைதிகளுக்கு ஒரு தொழில்துறை மற்றும் உள்நாட்டிலும்,சர்வதேசத்திலும் அங்கீகாரம் பெற்ற தொழில் துறை நிபுணராக அவர்களுக்கு தொழில்துறை பயிற்சி மற்றும் வெளிநாட்டு மொழித் தேர்ச்சியை வழங்குவதும் முக்கிய நோக்கமாகும்.

இந்த திட்டம் நீதி அமைச்சு, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் இலங்கை சிறைச்சாலை ஆணைக்குழு மேற்பார்வையுடனும் ஒத்துழைப்புடனும் அமைச்சரவை 2020 மே 13 அன்று அனுமதி அளித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி