தேர்தலை நடத்துவது சம்பந்தமாக பரிந்துரை செய்திருந்தாலும்,கொரோனா வைரஸ் ஏதோ ஒரு வகையில் மூன்று வாரங்களுக்குள் திரும்பி வந்தால், தேர்தல் அல்ல வேறு எதுவும் சாத்தியமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க கூறுகிறார்.

நேற்று (மே 24) தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுடன், நாடு மீண்டும் திறக்கப்படும், பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

தேர்தலை நடத்துவது ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காகவே, இப்போது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க கூறுகிறார்.

ஜனாதிபதியின் செயலாளருக்கு வழங்கப்பட்ட பரிந்துரை:

மேலும் கருத்து தெரிவித்த  வைத்தியர் அனில் ஜாசிங்க,பொதுச் சேவையின் முதல் அதிகாரியான, ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர பொதுத் தேர்தலை நடத்தக்கூடிய நாட்டின் சுகாதார நிலைமை குறித்து விளக்குமாறு  எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாட்டின் சுகாதார பின்னணியை தெரிவித்தேன். இதில் எவ்வித அரசியல் நிலைப்பாடும் இல்லை.

நாட்டை மீண்டும் திறப்பது கொரோனா நோய்க்கான அபாயத்தைக் குறைக்காது. ஆகவே, இன்று போலல்லாமல், நோயைக் கட்டுப்படுத்தும் சரியான சுகாதாரப் பழக்கங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். தனிமைப்படுத்தப்படும் சட்டங்கள் கண்டிப்பாக செயற்படுத்தப்பட வேண்டும்.

'அரசியல் கட்சிகளின் தேவைகளுக்கு ஏற்ப சுகாதார முடிவுகள் எடுக்கப்படவில்லை'

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதைத் தொடர்ந்து நாடு சுகாதார வழிகாட்டுதல்களுடன் மீண்டும் திறக்கப்படுகிறது. எனவே, இந்த விஷயத்தில் அரசியல்வாதிகள் தலையிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவும் சுகாதாரத் துறை வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறார். ஆனால் அரசியல்வாதிகள் நாட்டின் பல்வேறு பிரிவுகளுக்கு விரைவாக திறக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றனர். அரச ஊழியர்கள் என்ற வகையில் இது எங்களுக்கு மிகவும் மன அழுத்தமாக இருக்கிறது.

அரச அதிகாரியாக முப்பது ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் நான் சுதந்திரமாக பணியாற்றினேன். அரசியல் கட்சிகளின் தேவைகளுக்கு ஏற்ப சுகாதார முடிவுகள் எடுக்கப்படவில்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி