Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மின் கட்டணத்தில் மாற்றமில்லை!

T

The Leader Desk

அக்டோபர் 14, 2025 • 5:45 AM

மின் கட்டணத்தில் மாற்றமில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திருத்தத்தை மேற்கொள்ளப்போவதில்லை என்று, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
  • மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதம் உயர்த்தும் வகையில் இலங்கை மின்சாரசபை யோசனை ஒன்றை முன்மொழிந்திருந்தது.
  • இந்த மாதம் முதல் டிசம்பர் வரை நீடிக்கும் ஆண்டின் இறுதி காலாண்டுக்காக இந்த கட்டணத் திருத்தத்தை மின்சாரசபை முன்மொழிந்திருந்தது.
  • இந்த முன்மொழிவைச் சார்ந்த பொது கருத்து சேகரிப்பு கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் தொடங்கப்பட்டு, இறுதி அமர்வு அக்டோபர் 8ஆம் திகதி மேல் மாகாணத்தில் நடைபெற்றது.
எழுத்து அளவு:

திருத்தத்தை மேற்கொள்ளப்போவதில்லை என்று, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் மூன்று மாதக் காலப்பகுதியில் மின் கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் ஏற்படுத்தப்படுவதில்லை என்று, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல்.சந்திரலால் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் தற்போது நடைபெற்றுவரும் ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) நாளைய தினம் அறிவிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டிற்கான இறுதி மின் கட்டண மாற்றம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதம் உயர்த்தும் வகையில் இலங்கை மின்சாரசபை யோசனை ஒன்றை முன்மொழிந்திருந்தது.

இந்த மாதம் முதல் டிசம்பர் வரை நீடிக்கும் ஆண்டின் இறுதி காலாண்டுக்காக இந்த கட்டணத் திருத்தத்தை மின்சாரசபை முன்மொழிந்திருந்தது.

இந்த முன்மொழிவைச் சார்ந்த பொது கருத்து சேகரிப்பு கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் தொடங்கப்பட்டு, இறுதி அமர்வு அக்டோபர் 8ஆம் திகதி மேல் மாகாணத்தில் நடைபெற்றது.

அந்த கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் கருத்தில் கொண்டு, மின்சாரக் கட்டண மாற்றம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்த இறுதி தீர்மானம் இன்ற அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டின் மூன்றாவது மின் கட்டண மாற்றத்தைச் சார்ந்த கருத்து சேகரிப்பு அமர்வுகளில் சுமார் 500 பேர் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்திருந்தனர்.

இதற்கிடையில், மின்சார சபையின் மறுசீரமைப்பு முறையாக முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மின்கட்டண உயர்வை தடுக்க முடியாது என இலங்கை மின்சாரசபை சுயாதீன தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

அத்துடன், தங்களது சங்கம் தற்போது மின்சாரசபை மறுசீரமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மின் கட்டணத்தில் மாற்றமில்லை! | Tamil Leader | We Lead the Nation