Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

14 நாட்கள் கட்டுப்பாடுகள் போதுமானதாக இல்லை! 21 நாட்கள் சுழற்சி முறையில் கட்டுப்பாடுகள் வேண்டும்! சுகாதார நிபுணர்கள்

T

The Leader Desk

ஜூன் 3, 2021 • 5:07 AM

14 நாட்கள் கட்டுப்பாடுகள் போதுமானதாக இல்லை! 21 நாட்கள் சுழற்சி முறையில் கட்டுப்பாடுகள் வேண்டும்! சுகாதார நிபுணர்கள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு, நேற்று (02) மாலை, விடுக்கப்பட்டன.
  • மூன்றாவது கொரோனா அலைக்குப் பின்னர் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், தளர்வின்றி தொடர்ச்சியாக 19 நாள்கள் அமுல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
  • கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தாக்கத்தின் பின்னர், பயணக் கட்டுப்பாடுகள் மே.21ஆம் திகதி அமுல்படுத்தப்பட்டு, அத்தியாவசிய தேவைகளுக்காக மே.25ஆம் திகதியன்று தளர்த்தப்பட்டது.
  • இந்நிலையிலேயே, ​சுகாதார தரப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஜூன் 14ஆம் திகதி வரையிலும் பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு, நேற்று (02) மாலை, விடுக்கப்பட்டன. மூன்றாவது கொரோனா அலைக்குப் பின்னர் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், தளர்வின்றி தொடர்ச்சியாக 19 நாள்கள் அமுல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தாக்கத்தின் பின்னர், பயணக் கட்டுப்பாடுகள் மே.21ஆம் திகதி அமுல்படுத்தப்பட்டு, அத்தியாவசிய தேவைகளுக்காக மே.25ஆம் திகதியன்று தளர்த்தப்பட்டது.

மே.31, ஜூன் 4 ஆகிய திகதிகளிலும் தளர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டு, ஜூன் 7ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டது.எனினும், அத்தியாவசியப் பொருள்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட “நிவாரண நாளில்” மக்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் ​சுகாதார தரப்பினரும், கொவிட-19 தொற்றொழிப்பை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணியும் கடுமையான அதிருப்தியை கொண்டிருந்தன.

இந்நிலையிலேயே, ​சுகாதார தரப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஜூன் 14ஆம் திகதி வரையிலும் பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸின் வேகமாக பரவும் மூன்றாவது அலைகளைக் கட்டுப்படுத்த 14 நாட்கள் கட்டுப்பாடு போதுமானதாக இருக்காது என்று சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, இலங்கையில் வைரஸ் பரவுவதைக் குறைக்கவேண்டுமாயின் 21 நாள்கள் தடையில்லா சுழற்சி கட்டாயமாக அமுல்படுத்தவேண்டுமென சுகாதார நிபுணர்கள் கோரியிருந்தனர்.

14 நாள்கள் கட்டுப்பாடுகள் போதுமானதாக இல்லையென சுகாதார நிபுணர்கள் பலரும் கவலை தெரிவித்தனர். அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கமும் அதிருப்தி கொண்டிருந்தது. அதுமட்டுமன்றி, 21 நாள்கள் தடையில்லா சுழற்சி முறையிலான கட்டுப்பாடுகளுக்கு

சுகாதார அமைப்புகள் பலமுறை ​கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...