ஸ்ரீலங்கன் எயாலைன்ஸ் யுஎல் 226 பயணிகள் விமானம் நேற்று (மே 07) இலங்கைக்கு வந்துள்ளனது அதில் ஒருவருக்கு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை  தொடர்ந்து விமானத்தில் இருந்த குழுவினர் விமான பணியாளர்கள் மிகவும் பதட்டமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் மொத்தம் 200 பயணிகளும் 12 பணியாளர்களும் இருந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நோயாளி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் மேற்கொண்ட சோதனைகளில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

துபாயிலிருந்து ஒப்படைக்கப்பட்ட10 பேரும் யார்?

துபாயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் புறப்படுவதற்கு சற்று முன்னதாக பத்து பேர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

விமானப்படை அதிகாரிகளின் அனுபவம் என்னவென்றால், வி.ஐ.பி.க்கள் அல்லது கைதிகள் தான் பொலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு விமானத்தில் ஒப்படைக்கப்படுவார்கள்.

இருப்பினும், விமான உதவியாளர்கள் யாரும் கொரோனாவை ஆய்வு செய்யவில்லை, அவர்களுடன் வந்த ஒரு விமானப் பயணி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, விசேட பாதுகாப்பு மற்றும் சுகாதார திட்டங்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்களுக்கு  கொரோனா தொற்று பரிசோதனை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

துபாயிலிருந்து இலங்கையர்களை திருப்பி அழைத்து வர திலித் 22 மில்லியன் நன்கொடை அளித்திருக்கிறார்.

துபாயில் உள்ள இலங்கையர்களை திரும்பக் கொண்டுவர ஜார்ஜ் ஸ்டீவர்ட் மே 6 அன்று 22 மில்லியன் ரூபாய் நன்கொடை அளித்தார்.

ஜார்ஜ் ஸ்டுவர்ட் டின் தலைவர் திலித் ஜெயவீர காசோலையை ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுக்கு வழங்கினார்.

இதனை ஜனாதிபதியின் பேஸ்புக் பக்கம் தெரிவித்தது

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி