Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 30% மண் சரிவு அபாயத்தில்!

T

The Leader Desk

டிசம்பர் 13, 2025 • 4:18 AM

இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 30% மண் சரிவு அபாயத்தில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • % பேர் வாழ்வதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் (National Building Research Organisation - NBRO) சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதிீர தெரிவித்துள்ளார்.
  • அவர் நேற்று (12) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.
  • மண் சரிவு அபாயத்திற்குள்ளான பிரதான 6 மாவட்டங்களும் அதற்கு அண்மையிலுள்ள மேலும் 8 மாவட்டங்களும் மண் சரிவு அபாயத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  • தித்வா சூறாவளியுடன் ஏற்பட்ட அதிக மழை காரணமாக, மண் சரிவுக்குள்ளாகக்கூடிய இடங்களைச் சோதித்துத் தருமாறு 2,710 கோரிக்கைகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

34% பேர் வாழ்வதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் (National Building Research Organisation - NBRO) சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதிீர தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று (12) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.

மண் சரிவு அபாயத்திற்குள்ளான பிரதான 6 மாவட்டங்களும் அதற்கு அண்மையிலுள்ள மேலும் 8 மாவட்டங்களும் மண் சரிவு அபாயத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மண் சரிவு அபாயத்தில் உள்ள நிலப்பரப்பு சுமார் 20,000 சதுர கிலோமீட்டர்கள் என்றும் அவர் கூறினார்.

தித்வா சூறாவளியுடன் ஏற்பட்ட அதிக மழை காரணமாக, மண் சரிவுக்குள்ளாகக்கூடிய இடங்களைச் சோதித்துத் தருமாறு 2,710 கோரிக்கைகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அனர்த்தத்திற்குள்ளான இடங்கள் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களின் (Satellite images) அடிப்படையில், 10 மீட்டருக்கும் அதிகமாக மண் சரிவு ஏற்பட்ட 1,241 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் ஒரு தானியங்கி மழைமானி அமைப்பை (Automated Rain Gauge System) பராமரித்து வருகிறது. அந்த மழைமானி அமைப்புகள் மூலமாகவே நிகழ்நேரத்தில் கிடைக்கும் மழையளவைப் பெற்று, மண் சரிவு எச்சரிக்கைகளை விடுக்கின்றோம். மக்கள் இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். தாங்கள் இருக்கும் அபாய நிலைமையைப் பற்றி நாங்கள் அறிவித்துள்ளோம்."

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...