Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இராணுவத்திடமுள்ள யாழ்., பலாலி காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

T

The Leader Desk

நவம்பர் 13, 2025 • 2:34 AM

இராணுவத்திடமுள்ள யாழ்., பலாலி காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான உயர் மட்டக் கூட்டம் ஒன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
  • தேசிய நல்லிணக்கச் செயற்பாட்டின் பிரதானமாக கருதப்படும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை துரிதப்படுத்தும் நோக்குடனேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
  • பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் துறைகளைச் சேர்ந்த பிற சிரேஸ்ட அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
எழுத்து அளவு:

முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான உயர் மட்டக் கூட்டம் ஒன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மீன்வளம், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இரா.சந்திரசேகர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடிதுவக்கு ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்.

தேசிய நல்லிணக்கச் செயற்பாட்டின் பிரதானமாக கருதப்படும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை துரிதப்படுத்தும் நோக்குடனேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

எல்லை மறுசீரமைப்புகளை இறுதி செய்தல், இழப்பீட்டு செயல்முறையை விரைவுபடுத்துதல், விடுவிப்பதற்கான காணித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் நிர்வாக இடையூறுகளைத் தகர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு வௌியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் துறைகளைச் சேர்ந்த பிற சிரேஸ்ட அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இராணுவத்திடமுள்ள யாழ்., பலாலி காணிகளை விடுவிக்க நடவடிக்கை! | Tamil Leader | We Lead the Nation