அநுராதபுரம் மேலதிக நீதிவான்
நீதிமன்றில் நேற்று (04) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் பல பொலிஸ் குழுக்களின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அநுராதபுரம் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவாபத்ரனவின் நேரடி கண்காணிப்பில் வடமத்திய பிரதி பொலிஸ் மா அதிபர் பி.டி.சுகதபால, அநுராதபுரம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (1) பிரதீப் தர்மதாச மற்றும் அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம். ஜெயவீர ஆகியோர் தலைமையில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாப நீதவான் மனோதி ஹேவாவசம் நீதிபதியின் அலுவலகத்தை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிடுகின்றது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.