leader eng

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின்

வெற்றிக்காக மதவாச்சி தொகுதியின் கிரிகல்லேவ பிரிவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தின் மீது சிலர் மலக்கழிவை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜனதா விமுக்தி பெரமுனவின் குண்டர்களே இதனைச் செய்துள்ளதாகவும் இவர்கள் தமது தோல்வியைத் தாங்க முடியாமல் மீண்டும்  இவ்வாறு செயற்பட்டு வருவதாகவும் அந்த இடத்துக்குச் சென்ற தமது கட்சி உறுப்பினர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்தார்.
 
அப்பாவி மக்கள் தமது சித்தாந்தங்களுக்கு அடிபணியாத பட்சத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வார்கள் எனவும், இவ்வாறான அடக்குமுறைகளின் ஊடாக பயங்கரவாதத்தை முன்னிலைப்படுத்தி தமது இயலாமையை காட்டுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார். 
 
இதுகுறித்து, மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு அளித்ததையடுத்து, பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி