Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

13 -க்கும் மேற்பட்ட லாரிகளை கொள்ளையடித்து டிரைவர்கள்- கிளீனர்களை கொன்று புதைத்த பிரபல தாதா உள்ளிட்ட 12 பேருக்கு தூக்கு!

T

The Leader Desk

மே 25, 2021 • 5:37 PM

13 -க்கும் மேற்பட்ட லாரிகளை கொள்ளையடித்து டிரைவர்கள்- கிளீனர்களை கொன்று புதைத்த பிரபல தாதா உள்ளிட்ட 12 பேருக்கு தூக்கு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாயமானவர்களின் குடும்பத்தினரிடமிருந்தும், வாகனம் மற்றும் சரக்குகளை கண்டுப்பிடித்துத் தரக்கோரி அதன் உரிமையாளர்களிடமிருந்தும் புகார்கள் குவியத் தொடங்கியது.
  • காணாமல் போன 13 லாரிகளுக்கும், அவற்றின் ஓட்டுநர்களுக்கும் இதே கதி தான் ஏற்பட்டு உள்ளது.
  • இந்த வழக்கில் கேங்க்ஸ்டர் முன்னா பாயை நெருங்குவதிலும், விசாரணைக்கு அவரை உட்படுத்துவதிலும் பிரகாசம் மாவட்ட பொலிசாருக்குப் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன.
  • அவரின் கூட்டாளிகள் 17 பேரும் பிடிபட்டனர்.
எழுத்து அளவு:

மாயமானவர்களின் குடும்பத்தினரிடமிருந்தும், வாகனம் மற்றும் சரக்குகளை கண்டுப்பிடித்துத் தரக்கோரி அதன் உரிமையாளர்களிடமிருந்தும் புகார்கள் குவியத் தொடங்கியது.

இதை தொடர்ந்து பொலிசார் நடத்திய ரகசிய விசாரணையில்  முன்னா பாய் என்பவர்  தலைமையிலான கும்பல், ஆந்திர பொலிசார்  உடையில் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு லாரிகளை சூறையாடியது தெரியவந்தது.

2008 ஆம் ஆண்டில் பிரகாசம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் மற்றும் அவற்றின் பொருட்கள் நிறைந்த லாரிகள் காணாமல் போனது பொலிசைக் குழப்பியது. தமிழகத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளரான வீரப்பன் குப்புசாமி அளித்த புகாரின் அடிப்படையில் ஓங்கோல் பொலிசார்  வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து முன்னா மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர்.

முன்னா பாயின் இயற்பெயர் முகமது  அப்துல் சமத். லாரிகளை மறிக்கும் இந்த கும்பல், ஓட்டுநர் மற்றும் கிளீனர்களை கொன்று தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வனப்பகுதிக்குள் உடல்களை புதைத்திருக்கின்றனர். பின்னர், லாரிகளைக் கடத்திச்சென்று அதிலுள்ள சரக்குகளை மார்க்கெட்டில் விற்பனை செய்திருக்கின்றனர். அந்த லாரிகளின் பாகங்களையும் பிரித்து விற்றுள்ளனர். காணாமல் போன 13 லாரிகளுக்கும், அவற்றின் ஓட்டுநர்களுக்கும் இதே கதி தான் ஏற்பட்டு உள்ளது.

ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த கேங்க்ஸ்டர் முன்னா பாய், ஊரில் பெரிய மனிதராக வலம் வந்திருக்கிறார். பின்னணியில் அரசியல் செல்வாக்கும் இருந்திருக்கிறது. இந்த வழக்கில் கேங்க்ஸ்டர் முன்னா பாயை நெருங்குவதிலும், விசாரணைக்கு அவரை உட்படுத்துவதிலும் பிரகாசம் மாவட்ட பொலிசாருக்குப் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன.

ஆதாரங்களைத் திரட்டிய பொலிசார், முன்னா பாயை கைது செய்ய முயன்றபோது தப்பிச் சென்றுவிட்டார். முன்னா பாயைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள்  அமைக்கப்பட்டன. பெங்களூருவில், முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த முன்னா பாய் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். அவரின் கூட்டாளிகள் 17 பேரும் பிடிபட்டனர்.

இந்த வழக்கு விசாரணை ஓங்கோல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கில் தொடர்புடைய முன்னா பாய் உட்பட 18 பேரும் குற்றவாளிகள் என உறுதியானது. கூடுதல் மாவட்ட 8-வது அமர்வு நீதிபதி ஜி.மனோகர்ரெட்டி, 13 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

ஐ.பி.சி 396-ன் கீழ்  முன்னா பாய் உட்பட 12 பேருக்கு மரண தண்டனையும், மேலும் 6 பேருக்கு ஐ.பி.சி 396 மற்றும் 120-பி ஆகியவற்றின் கீழ் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பு ஆந்திர மாநில ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உறுதிப்படுத்துவதற்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நாட்டிலேயே ஒரே வழக்கில் 11 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது, இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

13 -க்கும் மேற்பட்ட லாரிகளை கொள்ளையடித்து டிரைவர்கள்- கிளீனர்களை கொன்று புதைத்த பிரபல தாதா உள்ளிட்ட 12 பேருக்கு தூக்கு! | Tamil Leader | We Lead the Nation