Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

தந்தை செல்வாவின் 126ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

T

The Leader Desk

மார்ச் 31, 2024 • 1:30 PM

தந்தை செல்வாவின் 126ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சபையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் இன்று காலை இடம்பெற்றது.
  • இதுவேளை, தந்தை செல்வாவின் 126வது சிரார்த்த தின நிகழ்வு, மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா நினைவுப் பூங்காவில் நடைபெற்றது.
  • இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
எழுத்து அளவு:

சபையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது தந்தை செல்வாவின் நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வடக்கு மாகாண அவைத் தலைவர் சிவஞானம் உள்ளிட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதுவேளை, தந்தை செல்வாவின் 126வது சிரார்த்த தின நிகழ்வு, மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா நினைவுப் பூங்காவில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, தந்தை செல்வா நினைவுப் பூங்காவில் உள்ள தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கிளையின் தலைவர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அஞ்சலி நிகழ்வில் விசேடமாக நினைவுப்பேருரையினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் அ.கண்ணேராஜ் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் மகளிர், இளைஞர் அணி உறுப்பினர்கள், மாவட்ட கிளை,பிரதேச கிளைகளின் முக்கியஸ்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

Selva2.jpg

 

Selva_1_copy.jpg

 

Selva_5_copy.jpg

 

Selva_4_copy.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...