Tamil Leader News
முக்கியம்
வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●
செய்திகள்

'125 எம்.பிக்கள் வீடுசெல்ல வேண்டும்'

T

The Leader Desk

டிசம்பர் 4, 2023 • 1:42 PM

'125 எம்.பிக்கள் வீடுசெல்ல வேண்டும்'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என்றும் தற்போதுள்ள 225 பேரில் 125 பேர் வீட்டுக்கு செல்வார்கள்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
  • “விளையாட்டு துறையில் காணப்படும் மோசடிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு 2018ஆம் ஆண்லிருந்து நீதி அமைச்சுக்கு முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.
  • இந்த 225 பேரில் 125 பேர் வீட்டுக்கு செல்வார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

என்றும் தற்போதுள்ள 225 பேரில் 125 பேர் வீட்டுக்கு செல்வார்கள்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குடியகல்வுத் திணைக்களம் ஊடாக அனைத்து திருடர்களையும் நாங்கள் பிடித்தோம். இந்த திணைக்களத்தையே வலுப்படுத்த வேண்டும். குடியகவல்வு திணைக்களத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டும். வழக்கு தொடரவும், தண்டனை வழங்கவும் பதவி நீக்கம் செய்யவும் குடியகல்வு திணைக்களத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

“விளையாட்டு துறையில் காணப்படும் மோசடிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு 2018ஆம் ஆண்லிருந்து நீதி அமைச்சுக்கு முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.

“ஆனால், எந்தவித முறைப்பாட்டிற்கும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. ஊழல் மோசடிகள் எதுலும் நிறுத்தப்படவில்லை அனைத்தும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. அதேநேரம் இந்த நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நிதி அமைச்சும் பொறுப்பு கூற வேண்டும்.

“தான் சம்பாதித்தவைகளை நாட்டுக்கு கொடுக்கும் அரசியல்வாதி மற்றும் திரைசேரியை வீட்டுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசியல்வாதியே இந்த நாட்டுக்கு வேண்டும்.

“சிங்கம் போன்று சரியானதை சரி என்றும் பிழையை பிழை என்றும் கூறும் ஒரு தரப்பினரே இந்த நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும். இந்த 225 பேரில் 125 பேர் வீட்டுக்கு செல்வார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...