வெலிசர கடற்படை முகாமில் பணி புரிந்த 30 கடற்படை வீரர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதால் ஏனைய பொலிசார் மற்றும் ராணுவ வீரர்களுக்கும் வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளது .

பாதுகாப்பு ஆடைகளைப் பயன்படுத்தாதாது குறித்து சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு  கடுமையாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

23,000 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்திருந்தும் பாதுகாப்பு உடையில்லாமல் பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பெறும் அபாயத்தில் உள்ளனர்' என்ற தலைப்பில் lankadawasa.com என்ற இணையதளத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதில் இலங்கையின் சுகாதாரத் துறை, ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறை முக்கிய பங்கு வகிக்கின்றன.

முப்படைகளுக்கும், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டிற்காக பணியாற்றுவதற்காக கிட்டத்தட்ட 23,000 டொலர் வெளிநாட்டு நிதியை அரசாங்கம் பெற்றுள்ளது என்று கூறி, பசில் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

கொரோனா பாதுகாப்பு கடமையில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு சீருடைகள்!

ஜா-எல சுதுவெல்ல பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கவனிக்கும் நடவடிக்கைகளில் இவர்கள் பணியாற்றினர்.பின்னர் வெலிசரை கடற்படை முகாமில் இணைக்கப்பட்டபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறுகையில், இந்த கடற்படை வீரர்கள் கடந்த சில நாட்களாக ஜா-எல சுதுவெல்ல பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கவனிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அடையாளம் காண அவர்களுடன் தொடர்பு வைத்திருக்க வேண்டியிருந்தது, மேலும் சிலரைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. இந்த முறையில் வைரஸ் தொற்றப்பட்டிருக்கலாம் என்று தற்போது சந்தேகிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி