ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (28) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இவர்கள் இருவரும் சந்திக்கும் முதல் சந்திப்பு இது.

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 25ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்க்ஷ ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் தெரிக்கப்படுகிறது.

இதன்போது ஜனாதிபதி வேட்புமனு மற்றும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் கூட்டணி தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 30 சத வீத ஒதுக்கீடும் மாகாண சபைகளுக்கு 35  சத வீத ஒதுக்கீடும் வழங்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றத்துக்கு 40  சத வீத ஒதுக்கீடு வழங்கப்படும் என பசில் ராஜபக்க்ஷவிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த யோசனையைமுன்னாள் நிதியமைச்சர் நிராகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், உள்ளுராட்சி மன்றங்களுக்கு 90  சதவீத ஒதுக்கீட்டையும்மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றத்துக்கு 70  சத வீத ஒதுக்கீட்டையும் பசில் ராஜபக்க்ஷ கோரியுள்ளதாக தெரியவருகிறது.

அதன் காரணமாகவே அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீர்வின்றி முடிவடைந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி