பொலிஸ் மா அதிபர் பதவி

வெற்றிடமாக இல்லாததால், பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியல் யாப்புச் சபையின் தீர்மானங்களை உயர் நீதிமன்றத்தால் மாற்ற முடியாது என தெரிவித்த பிரதமர், பொலிஸ் மா அதிபரை யாராலும் காதைப் பிடித்து தூக்கி எறிய முடியாது என்றும் கூறினார்.
 
பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகளை தடை செய்ய சட்டத்தில் இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகளை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிடும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி