கத்தாரின் அல்-கிசா பகுதியில்

அமைந்துள்ள மூன்று மாடிகளைக் கொண்ட தங்கும் விடுதியில் நேற்று (24) மாலை ஏற்பட்ட திடீர் தீயினால் பெரும்  எண்ணிக்கையான  இலங்கை மற்றும் நேபாள பெண்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன..

இந்த மூன்று மாடி  கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது, தீ பரவியதால், அங்கு வசிக்கும் ஏராளமான இலங்கை மற்றும் நேபாள பெண்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற மேல் தரையில் குதித்தனர். இதன்போதே பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்தச் சம்பவத்தையடுத்து கத்தார் அரசு தீயணைப்புப் படை மற்றும் மீட்புப் படையைப் பயன்படுத்தி குடியிருப்பாளர்களை அங்கிருந்து மீட்டது.
 
இதற்காக கத்தார் விமானப்படை ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் சுமார் 600 பெண்கள் வசித்து வந்தனர்
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி