வழக்கு விசாரணை நடவடிக்கைகள்

நிறைவுபெறும் வரை தற்போதைய பொலிஸ் மா அதிபர் அந்தப் பதவியில் கடமையாற்றுவதை இடைநிறுத்துவதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதமரும் அங்கம் வகிக்கின்ற அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை திரிபுபடுத்தி சபாநாயகர் கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையின் கூட்டத்தின் பின்னர், அதன் முடிவை பாராளுமன்றத்திற்கு அறிவிக்காமல் ஜனாதிபதிக்கு இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம் அரசியலமைப்பை தெளிவாக மீறியுள்ளது. பிழையான, பொய்யான, வஞ்சிக்கும் இந்த  கடிதத்தின் அடிப்படையில் ஜனாதிபதி நியமனங்களை வழங்கியதும்  அரசியலமைப்புக்கு முரணானது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

சபாநாயகரின் அடிப்படையற்ற இவ்வாறான கடிதங்களை மூலமாகக் கொண்டு ஜனாதிபதி இவ்வாறான நியமனங்களை மேற்கொள்வது பொருத்தமான நடவடிக்கையா?  இது தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன?  அரசாங்கம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி