வதிவிட சான்றிதழ் வழங்குவதற்காக

40,000 ரூபா இலஞ்சம் பெற்ற டாம் வீதி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட  கிராம உத்தியோகத்தர் ஒருவர் மோதர அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கிராம அதிகாரி அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே கிராம அதிகாரி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
முறைப்பாட்டாளரின் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மாற்றத்துக்கும்  நகர்ப்புற திட்டத்தின் கீழ் வீடு  ஒன்றைப் பெற்றுக் கொள்ள வசிப்பிட சான்றிதழை வழங்குவதற்கும் பணதைப் பெற்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி