Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

டெல்லி வெடிப்பில் விடை தெரியாத 4 முக்கிய கேள்விகள்; சதிகாரர்களை நீதியின் முன் நிறுத்துவதாக மோடி உறுதி!

T

The Leader Desk

நவம்பர் 12, 2025 • 1:17 AM

டெல்லி வெடிப்பில் விடை தெரியாத 4 முக்கிய கேள்விகள்; சதிகாரர்களை நீதியின் முன் நிறுத்துவதாக மோடி உறுதி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பூடான் அரசு சார்​பில் தலைநகர் திம்பு நகரில் உலக அமைதி பிரார்த்​தனை திரு​விழா நடை​பெற்று வரு​கிறது.
  • மேலும் அந்​நாட்​டின் 4-வது மன்​னர் ஜிக்மே சிங்யே வாங்​சுக்​கின் 70-வது பிறந்​த​நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது.
  • இந்​நிலை​யில் பிரதமர் நரேந்​திர மோடி 2 நாள் பயண​மாக பூடான் புறப்​பட்​டுச் சென்​றார்.
  • தடயவியல் ஆய்வக அதிகாரி முகமது வாஹித் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகின்றன.
எழுத்து அளவு:

பூடான் அரசு சார்​பில் தலைநகர் திம்பு நகரில் உலக அமைதி பிரார்த்​தனை திரு​விழா நடை​பெற்று வரு​கிறது. மேலும் அந்​நாட்​டின் 4-வது மன்​னர் ஜிக்மே சிங்யே வாங்​சுக்​கின் 70-வது பிறந்​த​நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இந்​நிலை​யில் பிரதமர் நரேந்​திர மோடி 2 நாள் பயண​மாக பூடான் புறப்​பட்​டுச் சென்​றார்.

உலக அமைதி பிரார்த்​தனை திரு​விழா​வில் நேற்று பங்​கேற்ற பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

"பூடானின் 4ஆவது மன்​னர் வாங்​சுக், பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோ​ருக்கு வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன். இந்த நாள் பூடானுக்கு மட்​டுமல்ல, உலக அமை​தி​யில் நம்​பிக்கை கொண்ட அனை​வருக்​கும் முக்​கி​யத்​து​வம் வாய்ந்த நாள். இந்​தி​யா- பூ​டான் இடையி​லான கலாசார, ஆன்​மிக மற்​றும் வளர்ச்சி கூட்​டுறவு பல நூற்​றாண்​டு​கள் பழமை​யானது. இரு நாடுகளிடையேயான உறவு தொடர்ந்து வலுப்பெறும்.

"இன்று மிக கனத்த இதயத்​துடன் இங்கு வந்​துள்​ளேன். டெல்​லி​யில் நடை​பெற்ற கொடூர​மான சம்​பவம் அனை​வரை​யும் மிக​வும் துயரத்​தில் ஆழ்த்தி உள்​ளது. பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரின் துயரத்தை என்​னால் புரிந்து கொள்ள முடிகிறது. இன்று முழு தேசமும் அவர்​களுக்கு ஆதர​வாக நிற்கிறது.

"இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்தி வரும் அனைத்து அமைப்​பு​களு​ட​னும் திங்​கள்​கிழமை இரவு முழு​வதும் நான் தொடர்​பில் இருந்​தேன். எங்​கள் அமைப்​பு​கள் இந்த சதி​யின் அடித்​தளத்தை கண்​டு​பிடிக்​கும். இதற்குப் பின்​னால் இருக்​கும் சதி​காரர்​களை தப்ப விட​மாட்​டோம். அவர்​கள் அனை​வரும் நீதி​யின் முன் நிறுத்​தப்​படு​வார்​கள்" என்று அவர் தெரி​வித்​தார்.

இதேவேளை, டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில் பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பேசும்​போது, “டெல்​லி​யில் நிகழ்ந்த கொடூர​மான சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு இதயப்​பூர்​வ​மான இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். இந்த சம்​பவம் தொடர்​பாக முன்​னணி புல​னாய்வு அமைப்​பு​கள் வி​சா​ரணை நடத்தி வரு​கின்​றன. அதன்​ விவரம்​ விரை​வில்​ வெளி​யிடப்​படும்​" என்​று தெரிவித்தார்.

இவ்வாறிருக்க, இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பில் பிபிசி செய்திச் சேவையில் கட்டுரையொன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரை, “எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரை பின்வருமாறு,

டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெடிப்பு நடந்த இடத்தில் புலனாய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திங்கட்கிழமை மாலையில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு வெடிப்பு நிகழ்ந்தது. அதில் எட்டு பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நிகழ்ந்த உடனேயே காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் சம்பவ இடத்தை அடைந்தன.

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்திலிருந்து மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். ஆனால் பின்வரும் நான்கு கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

1. இது ஒரு பயங்கரவாத தாக்குதலா?
இதுகுறித்து காவல்துறை தெளிவான அறிக்கை வெளியிடவில்லை. சம்பவம் குறித்து பல அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதாக டெல்லி காவல் ஆணையர் கூறியுள்ளார்.

தடயவியல் ஆய்வக அதிகாரி முகமது வாஹித் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகின்றன. ஆய்வுக்குப் பிறகே கூடுதல் தகவல்கள் கிடைக்கும். மாதிரிகளை சோதித்த பின்னரே எந்த முடிவுக்கும் வர முடியும்." என்றார்.

வெடிப்பு குறித்து ஊடகங்களில் பல்வேறு ஊகங்கள் வெளியாகியுள்ளன. சில நேரில் கண்ட சாட்சிகள் வெடிப்பு சி.என்.ஜி.யால் (CNG) ஏற்பட்டதாகக் கூறினர். இருப்பினும் காவல்துறை இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

செவ்வாய்க்கிழமை காலை, டெல்லி (வடக்கு) டி.சி.பி. ராஜா பந்தியா ஊடகங்களிடம் பேசுகையில், "டெல்லி குண்டுவெடிப்பில் UAPA, வெடிபொருள் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் மற்றும் பிற நிபுணர் குழுக்களும் சம்பவ இடத்தில் உள்ளன. நாங்கள் அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து வருகிறோம்." என்று கூறியுள்ளார்.

2. வெடிப்பு எப்படி நடந்தது?
டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா செய்தியாளர்களிடம் பேசிய போது, "இந்த வெடிப்பு அருகிலுள்ள வாகனங்களையும் சேதப்படுத்தியது. தகவல் கிடைத்தவுடன், டெல்லி காவல்துறை, தடயவியல், என்ஐஏ மற்றும் என்எஸ்ஜி குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை மதிப்பிட்டு வருகின்றன. இந்த வெடிப்பு பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. உரிய மதிப்பீட்டிற்குப் பிறகு, அது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்." என்று கூறினார்.

ஆனால் கார் வெடிப்புக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அது எப்படி நடந்தது? காரில் ஏற்கனவே ஏதேனும் வெடிக்கக் கூடிய பொருள் அல்லது வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததா? காரின் எரிபொருள் டேங்க் அல்லது சிஎன்ஜி டேங்க் வெடித்து, மற்ற வாகனங்களையும் சேதப்படுத்தியதா? காரில் இருந்தவர்களுக்கு அதுகுறித்து முன்கூட்டியே ஏதேனும் தகவல் தெரியுமா? என்பன போன்ற கேள்விகளுக்கு இதுவரை தெளிவான பதில் இல்லை.

3. காரின் உரிமையாளர் யார்?
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், "திங்கட்கிழமை மாலை 7 மணியளவில், டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஒரு ஐ-20 ஹூண்டாய் காரில் வெடிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக, அருகிலுள்ள சில வாகனங்கள் சேதமடைந்தன. சிலர் காயமடைந்ததாக தகவல்கள் வந்துள்ளன. பெறப்பட்ட முதற்கட்ட தகவலின்படி, சிலர் உயிரிழந்துள்ளனர்." என்று குறிப்பிட்டார்.

அந்த கார் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. கார் யாருடையது? அது எங்கிருந்து வந்தது? அது எங்கு சென்றது? காரில் எத்தனை பேர் இருந்தனர்? என்பது இன்னும் தெளிவாகவில்லை.

4. இலக்கு யார்?
டெல்லி செங்கோட்டை ரயில் நிலையம் அருகே வெடிப்பு சம்பவம் தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது வேண்டுமென்றே அங்கே நடத்தப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாக இருந்தால், யார் இலக்கு? பொதுமக்கள் மட்டுமே இலக்குகளாக இருந்தார்களா? மாநிலத்திற்கு அல்லது நாட்டிற்கு வெளியே தொடர்புகள் உள்ளதா? என்பன போன்ற விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

டெல்லி வெடிப்பில் விடை தெரியாத 4 முக்கிய கேள்விகள்; சதிகாரர்களை நீதியின் முன் நிறுத்துவதாக மோடி உறுதி! | Tamil Leader | We Lead the Nation