சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ குற்றவாளி என்ற தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட குழுவினர் இந்த தண்டனையை அறிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட பின்னர் 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ மீதான ஆட்சி கவிழ்ப்பு முயற்சி குறித்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்தத் தீர்ப்பு பிரேசில் அரசியலில் மட்டுமின்றி, அவரது சர்வதேச கூட்டாளியான அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டு பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் போல்சனாரோ தோல்வியடைந்த பிறகு, முடிவுகளை மாற்றியமைக்க அவர் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2023 ஜனவரி 8 அன்று அவரது ஆதரவாளர்கள் பிரேசில் தலைநகரான பிரேசிலியாவில் உள்ள அரசு கட்டிடங்களைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களை போல்சனாரோ தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்த வழக்கில் போல்சனானோ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் , அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது .அதேபோல், இந்தத் தீர்ப்பு பிரேசில் அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், முதன்முறையாக ஒரு முன்னாள் இராணுவத் தலைவரும் ஜனாதிபதியும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி குற்றத்திற்காக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர்.
போல்சனாரோவுக்கு எதிரான தீர்ப்பு , நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என அஞ்சப்படுகிறது. போல்சனாரோ, ஏற்கனவே 2030 வரை தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு, போல்சனாரோ தனது அரசியல் வாரிசைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகலாம்.


