ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குமாறு
அழைப்பு கிடைத்தால், நாட்டு மக்களுக்காக தான் தயார் என மிஹிந்தலை ரஜமஹா விஹாராதிபதி வலவாகெங்குணுவெவ தர்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
அரச பதவிக்காகவோ, ஜனாதிபதி பதவிக்காகவோ அல்ல, நாட்டுக்காக மக்களுக்காக எங்கும் செல்லத் தயார் எனத் தெரிவித்த அவர், தமக்கு ஏற்கனவே அதிகளவான கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்புமனு என்பது தனிப்பட்ட விடயம் அல்ல எனவும், இது பெரும் குழு ஒன்று சேர்ந்து தீர்மானிக்க வேண்டிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று (1) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.