Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

12 வருடங்களாக மகனின் வருகைக்காக காத்திருந்த தமிழ் அரசியல் கைதியின் தந்தை மரணம்!

T

The Leader Desk

மே 2, 2021 • 11:20 AM

12 வருடங்களாக மகனின் வருகைக்காக காத்திருந்த தமிழ் அரசியல் கைதியின் தந்தை மரணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழ் அரசியல் கைதியின் தந்தை ஒருவரே இவ்வாறு உடல் நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
  • சம்பவத்தில் சுன்னாகம் செல்லாச்சி அம்மையார் வீதியை சேர்ந்த எஸ்.இராசவல்லவன் (வயது 79) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
  • சுன்னாகத்தை சேர்ந்த இராசவல்லவன் தபோரூபன் (வயது 39) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
  • அவருக்கான வழக்கு இடம்பெற்று கடந்த 2019 ஆம் ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
எழுத்து அளவு:

தமிழ் அரசியல் கைதியின் தந்தை ஒருவரே இவ்வாறு உடல் நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். தந்தையின் இறுதி சடங்கில் கூட மகன் கலந்து கொள்ள முடியாததால் உறவுகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சம்பவத்தில் சுன்னாகம் செல்லாச்சி அம்மையார் வீதியை சேர்ந்த எஸ்.இராசவல்லவன் (வயது 79) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுன்னாகத்தை சேர்ந்த இராசவல்லவன் தபோரூபன் (வயது 39) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கான வழக்கு இடம்பெற்று கடந்த 2019 ஆம் ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

மகன் கைது செய்யப்பட்ட பின்னர் தந்தை மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததுடன் நாளுக்கு நாள் அவரின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மகனின் விடுதலைக்காக இவர் பல முயற்சிகளை மேற்கொண்டும் அதற்கு பயன் கிடைக்கவில்லை.

மகனின் தண்டனைக்காலம் இன்னும் சில ஆண்டுகளில் முடியவுள்ள நிலையில் தந்தையார் உயிரிழந்தமை உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்பார்த்திருந்த  17 பேர் வரை உயிரிழந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது. .

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...