தற்போது தான் சட்டமா அதிபர்

பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.

இரண்டு சந்தர்ப்பங்களில், அவரது சேவையை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க ஜனாதிபதியின் பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரிக்கவில்லை.

சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரை பெரும்பான்மை வாக்குகளால் நிராகரிக்கப்பட்டதையடுத்து, அதனை மீள்பரிசீலனை செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை கடந்த  26 ஆம் திகதி மீண்டும் கூடியது.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அன்றைய தினம் மாலை 6.00 மணியளவில் ஆரம்பமான கூட்டம் சுமார் 4 மணித்தியாலங்கள் நீடித்தது.

60 வயதை எட்டிய பின்னர் சட்டமா அதிபரின் சேவை நீடிப்புக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் அரசியலமைப்பு சபைக்கு இல்லை என தீர்மானிக்கப்பட்டதாக அரசியலமைப்பு சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி, அரசியலமைப்பு பேரவையின் தீர்மானம் அன்றைய தினம் (26) இரவு ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி