ஹொரணை பிரதேசத்தில்

இன்று (11) அதிகாலை சகோதரிகள் இருவர் தங்கியிருந்த வீட்டுக்குள் முகத்தை மூடியவாறு நுழைந்த இனந்தெரியாத இருவர் வீட்டின் படுக்கையில் இருந்த சகோதரிகளில் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹொரணை மேவனபலன சிரில்டன் வத்தை உடகந்தயைச் சேர்ந்த 58 வயதான ரமணி சகுந்தலா என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார
 
படுகொலை செய்யப்பட்ட பெண் பங்களாதேஷ் பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொண்டவர் எனவும் அவர் தற்போது தனது தங்கையுடன் இந்த வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
 
கொலை செய்யப்பட்ட பெண் தனது சகோதரி உறங்கும் அறைக்கு அருகில் உள்ள  அறையில் தரையில் உறங்கிக் கொண்டிருந்தபோதே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி