உணவை ஊட்டும்போது பிள்ளையைக் கொடூரமாக

தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சமிந்த அல்லது "குக்குல் சமிந்த என்பவர் நேற்று  (07) அங்குள்ள சிறைக் கைதிகள் குழுவினால் தாக்கப்பட்டு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். 

பிள்ளையைத் தாக்கிய சந்தேகத்தில் தந்தை எனக் கூறப்படும் இந்நபர் வெலிஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சுற்றுலா நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெலிஓயா ஹன்சவில கிராமத்தைச் சேர்ந்த சந்தேக நபர் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே கைதிகள் குழு இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

நான்கரை வயது பிள்ளையைத் தாக்கிய சந்தேகத்தில் கடந்த 5ஆம் வெலிஓயா பொலிஸாரால் புல்மோட்டை, அரிசிமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பிள்ளை தாக்கப்படுவதனை சந்தேகநபரின் மகன் தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....